முகப்புகோலிவுட்

முதல் முறையாக வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கும் ‘லாக்கப்’? தனுஷ் வெளியிட்ட பர்ஸ்ட் லுக்!

  | June 16, 2020 08:59 IST
Venkat Prabhu

துனுக்குகள்

 • ஆர்.கே.நகர் படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார்
 • இந்த படத்தில் சீரியல் நடிகை வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார்
 • வெங்கட் பிரபு இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
முதல் முறையாக வைபவ் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் பிரபு.
 
இயக்குனர் எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக தொலைக்காட்சி புகழ் வாணி போஜன் நடித்து வருகிறார்.
 
காமெடி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வந்த வைபவ் தற்போது கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியுள்ளார். நித்தின் சத்யா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘லாக்கப்' என படக்குழு பெயரிட்டுள்ளது. மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பல்வேறு வெற்றி படங்களை இயக்கிய வெங்கட் பிரபு முதல் முறையாக இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி நேற்று மாலை நடிகர் தனுஷ் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டார். வெளிட்ட சில மணித்துளிகளிலே இணையதளங்களில் இந்த போஸ்டர் வைரலானது. வெங்கட் பிரபு இந்த படத்தில் நடித்து வருவதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு தற்போது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
 
வெங்கட் பிரபு தயாரித்த ஆர்.கே. நகர் திரைப்படம் படப்பிடிப்பு பணிகள் நிறைவாகி இன்னும் வெளியாகமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com