முகப்புகோலிவுட்

STR-ன் ‘உத்தமன் ஆன்தம்’மை வெளியிடும் வெங்கட் பிரபு..!

  | February 03, 2020 15:10 IST
Uthaman Anthem

‘இவன் தான் உத்தமன்’ திரைப்படத்துகாக STR பாடியுள்ள ‘உத்தமன் ஆன்தம்’ பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு இன்று வெளியிடுகிறார்.

‘இவன் தான் உத்தமன்' திரைப்படத்துகாக STR பாடியுள்ள ‘உத்தமன் ஆன்தம்' பாடலை இயக்குனர் வெங்கட் பிரபு இன்று வெளியிடுகிறார்.

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்த மகத் ராகவேந்திரா மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘இவன் தான் உத்தமன்'. இப்படத்தை மக்வென் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

ரொமாண்டிக் ட்ராமா கதைகளத்தில் அமைந்துள்ள இப்படத்தை பரதன் பிக்சர்ஸ் பேனரில் ஆர்.வி. பரதன் தயாரிக்கிறார். இப்படத்துக்கு எஸ். தமன் இசையமைக்கிறார். இப்படத்துகு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்திலிருந்து, முதல் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாகிறது. ‘டேய் மவனே' எனத் தொடங்கும் ‘உத்தனம் ஆன்தம்' எனக் கூறப்படும் பாடல் தான் அது. இதனை எஸ்.டி.ஆர் பாடியுள்ளார். இப்பாடலை இன்று மாலை இயக்குனர்-நடிகர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

சிலம்பரசனின் பிறந்தநாளான் இன்று இப்பாடல் வெளியாவதால் ரசிகர்கள் இப்பாடலை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்