முகப்புகோலிவுட்

“வன்மம் வேண்டாம் அன்பை வளர்ப்போம்” வடிவேலு பிரச்னை குறித்து வெங்கட் பிரபு கருத்து!

  | June 13, 2019 14:20 IST
Vadivelu

துனுக்குகள்

  • இந்த படத்தை சிம்பு தேவன் இயக்கி இருந்தார்
  • ஷங்கர் இப்படத்தை தயாரித்து இருந்தார்
  • இப்படத்தின் இரண்டாம் பாகம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது
வடிவேலு நாயனாக நடித்து மாபெறும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி”. இப்படத்தை சிம்புதேவன் இயக்க ஷங்கர் இப்படத்தை தயாரித்திருந்தார்.
 
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருந்தார் சிம்பு தேவன். இப்படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இயக்குநருக்கம் வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.
 
இந்த படத்தை முடித்து கொடுக்காமல் அடுத்த படத்தில் நடிக்கக் கூடாது என்று நடிகர் சங்கம் உத்தரவிட்டது. இந்நிலையில் வடிவேலு அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘இயக்குநர் சங்கர் மற்றம், சிம்புதேவனை கடுமையாக சாடி இருந்தார். இதற்கு இயக்குநர் நவீன், சமுத்திரகனி பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்,
 
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு “எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், ‘டைரக்டர் சொதப்பிட்டான்பா' இதுதான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது!.
 
ஒரு ஆகச்சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடையச் செய்தது. இயக்குநர் சிம்புதேவனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவர் அருமையான படைப்பாளி மட்டுமில்லை. மிகச்சிறந்த மனிதர்.
 
ஷங்கர் அவர்களைப் பற்றி யாரும் சொல்ல அவசியமே இல்லை. அவர் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர். எல்லோரும் இங்கு மக்களை மகிழ்விக்கத்தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே. அன்பை மட்டும் வளர்ப்போம்” என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்