முகப்புகோலிவுட்

“வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன்” வெங்கட் பிரபு அதிரடி!

  | June 13, 2019 16:18 IST
Venkat Prabhu

துனுக்குகள்

  • வெங்கட் பிரபு மாநாடு படத்தை இயக்கவிருக்கிறார்
  • மாநாடு படத்திற்கு யுவன் இசை அமைக்கிறார்
  • மாநாடு படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார்
எச்.வினோத் இயக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை'. அஜித் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வித்யா பாலன், ஆதிக் ரவிசந்திரன் இன்னும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களைடைய பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ட்ரெய்லரைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
 
இதில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் அஜித், யுவன், வெங்கட் பிரபு இணைந்த மங்காத்தா கூட்டணி எப்போது என்று கேட்டார். அதற்கு மற்றொரு ரசிகர், திரும்ப வெங்கட் பிரபு எடுத்தா அது நிச்சயமாக பிளாப் ஆகும்னு வெங்கட் பிரபுவுக்கே தெரியும். ஏனென்றால் வெங்கட் பிரபு கிட்ட நல்ல கதை இல்ல என்று கூறினார்.
 
இதற்கு வெங்கட் பிரபு, ‘வச்சிகிட்டா வஞ்சனை பண்றேன். என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு என்று நகைச்சுவையாக பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்