முகப்புகோலிவுட்

100M வியூஸ் கடந்த ‘வெறித்தனம்’! ‘தளபதி’ விஜய் & ஏ.ஆர். ரகுமான் ரசிகர்கள் உற்சாகம்.!

  | September 13, 2020 00:21 IST
Ar Rahman

ஏ.ஆர். ரகுமானின் இசையில் தளபதியே பாடியுள்ள பாடல் என்றால் சொல்லவே தேவையில்லை. வேற லெவல் வைரல் ஹிட் தான்.

‘பிகில்' திரைப்படத்தின் ‘வெறித்தனம்' பாடல் இணையத்தில் மிக அதிகமான பார்வைகளை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள, பிகில் படம், தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி வெளியானது. படம் வெளியாகி 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்ததாகவும், மேலும் மொத்தமாக பாக்ஸ் ஆபீஸில் ரூ. 300 கோடி வசூலித்ததாகவும் தகவல்கள் இருக்கின்றன.

ஏ.ஆர். ரகுமான இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவெல் ஹிட்டானது. வெறித்தனம், சிங்கப்பெண்ணே, உனக்காக, பிகிலு பிகிலுமா என இப்படத்திலிருந்து இணையத்தில் வெளியான அனைந்து லிரிக்கல், மற்றும் வீடியோ பாடல்கள் அனைத்தும் பல கோடிக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், விஜய் பாடிய ‘வெறித்தனம்' பாடல் வீடியோ தற்போது புதிய எல்லையை எட்டியுள்ளது. தற்போது இப்பாடல் 100 மில்லியன் வியூஸ், அதாவது 10 கோடி முறைக்கு மேல் யூடியூப் தளத்தில் பார்க்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் #VerithanamHits100MViews ஹாஷ்டேகுடன் இணையத்தில் வெறித்தனமாக ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். இயல்பாகவே ‘தளபதி' விஜயின் அறிமுக பாடல் மிகப் பெரிய ஹிட்டாகிவிடும் என்பது எல்லோருக்கும் தெரியும், அதுவே ‘இசைப் புயல்' ஏ.ஆர். ரகுமானின் இசையில் தளபதியே பாடியுள்ள பாடல் என்றால் சொல்லவே தேவையில்லை. வேற லெவல் வைரல் ஹிட் தான்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com