முகப்புகோலிவுட்

ஆனந்தின் "நண்பன் ஒருவன் வந்த பிறகு" - சிவகார்த்திகேயன் வெளியிட்ட First லுக் போஸ்டர்..!

  | August 02, 2020 11:25 IST
Nanban Oruvan Vantha Piragu

துனுக்குகள்

 • தமிழ் திரையுலகம் எப்போது திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு
 • இந்நிலையில் பிரபல நடிகரும், இன்று பலரும் போற்றும் நல்ல மனிதருமான
 • படத்தின் First லுக் போஸ்ட்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது
தமிழ் திரையுலகம் எப்போது திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தளமாகவே திகழ்கிறது என்றால் அது மிகையல்ல. Movie Mafia, Nepotism என்ற பல விஷயங்களை முன்வைத்தாலும் அதை உடைத்தெறிந்து வெற்றிகண்ட மனிதர்கள் இங்கு பலர் உண்டு. அண்மைக்காலமாக பல புதுமுக இயக்குநர்கள் தங்களுடைய முதல் படத்திலேயே மக்களையும் விமர்சகர்களையும் கவர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஈஸ்வர் கார்த்திக், தேசிங்கு பெரியசாமி போன்ற பல புதுமுக இயக்குநர்கள் அதற்கு சான்று.

இந்நிலையில் பிரபல நடிகரும், இன்று பலரும் போற்றும் நல்ல மனிதருமான சிவகார்த்திகேயன் அவர்கள் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' என்ற படத்தின் First லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார். White Feather Studios என்ற நிறுவனத்தின் முதல் படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான RJ விஜய், பவானி நடிக்க மீசைய முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக நடித்த அனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

படத்தின் First லுக் போஸ்ட்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். விரைவில் இந்த படம் குறித்து பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணை தொடலாம் என்னதான் சிறகு...      
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com