முகப்புகோலிவுட்

பிரபல குணச்சித்திர நடிகர் மரணம்..!

  | November 27, 2019 11:03 IST
Actor Bala Singh

துனுக்குகள்

 • பாலா சிங் அவதாரம் படத்தில் அறிமுகமானார்.
 • அவர் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
 • அதில் 100 படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
பிரபல குணச்சித்திர நடிகர் பாலாசிங் மாரடைப்பால் இன்று காலமானார்.

நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பாலாசிங். இவர் முன்னதாக சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 120 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். இவர் கடைசியாக சூர்யாவின் என்.ஜி.கே, மகாமுனி திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் சூலம், ருத்ரவீணை, நல்ல நேரம் மற்றும் ஆதிரா ஆகிய தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சென்னை வடபழனியில் வசிக்கும் இவருக்கு தற்போது 67 வயதாகும். சில தினங்களுக்கு முன்பு, காய்ச்சல் மற்றும் மூச்சுத்தினரல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com