முகப்புகோலிவுட்

இளையராஜா குழுவை சேர்ந்த மூத்த இசைக்கலைஞர் காலமானார்; திரையுலகினர் இரங்கல்.!

  | May 20, 2020 14:25 IST
Purushothaman

மூத்த இசைக்கலைஞருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இசைஞானி இளையராஜாவின் அணியில் நீண்டகாலம் இருந்த, மூத்த இசைக்கலைஞர் புருஷோத்தமன் நேற்று காலமானார். அவருக்கு வயது 65. இளையராஜாவின் அணியின் ஆரம்பக்கட்டத்திலிருந்து நீண்டகால உறுப்பினர்களில் ஒருவர் புருஷோத்தமன்.

புருஷோத்தமன் தனது முதல் திரைப்படமான ‘அன்னக்கிளி' முதல் இளையராஜாவுடன் இருந்து வருகிறார், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மேஸ்ட்ரோ இசையமைத்த அனைத்து திரைப்படங்களிலும் பணிபுரிந்தார். புருஷோத்தமன் ஒரு டிரம்மர் மற்றும் இசை நடத்துநராக அணியில் இருந்தார்.

புருஷோத்தமன் தனது முதுமை தொடர்பான வியாதிகளால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்பே காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மூத்த இசைக்கலைஞருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள், உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com