முகப்புகோலிவுட்

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் ‘வாடிவாசல்’

  | January 13, 2020 16:17 IST
Vaadivaasal

துனுக்குகள்

  • வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
  • சூர்யா முதல் முறையாக வெற்றிமாறனுடன் இணைந்துள்ளார்.
  • இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டின் 2-ஆம் பாதியில் துவங்கப்படுகிறது
வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் தயாராகும் திரைப்படத்துக்கு ‘வாடிவாசல்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

பூமணியின்  ‘வெக்கை' நாவலை, தனுஷுடன் இணைந்து ‘அசுரன்' எனும் சிறப்பான படமாக மாற்றிய வெற்றிமாறன், இப்போது செல்லப்பாவின் புகழ்பெற்ற ‘வாடி வாசல்' நாவலை திரைப்படமாக இயக்க தயாராகிவிட்டார். இப்படம்  ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

முன்னதாகவே இவர்களின் கூட்டணி உறுதியான நிலையில், இப்படத்தின் தலைப்பு, சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருது விழாவில் வெற்றிமாறனால் அறிவிகப்பட்டது.
இயக்குனர் வெற்றிமாறன் இந்த நாவலின் திரைப்பட உரிமையை 2017-ல் வாங்கியுள்ளார், அதை ஒரு பெரிய ஹீரோவை வைத்து படமாக்க சரியான நேரத்திற்காக காத்திருந்தார். வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற சூர்யா தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய நிலையில், அவருக்கு  ‘வாடி வாசல்' கதையை கூறியுள்ளார். சூர்யாவும் உடனடியாக ஒப்புக்கொள்ள, இத்திரைப்படம் தற்போது உறுதியாகியுள்ளது.

அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் துவங்கப்படும் இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  ‘வாடி வாசல்' தொடங்குவதற்கு முன், நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியுடனான புதிய படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் துவங்கவுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்