முகப்புகோலிவுட்

புதிய படத்திற்கு பூஜை போட்ட வெற்றிமாறன்

  | January 22, 2018 22:02 IST
Vetrimaaran Next Film

துனுக்குகள்

 • இப்படத்திற்கு ‘சங்கத்தலைவன்’ என டைட்டில் சூட்டியுள்ளனர்
 • இதனை இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கவுள்ளார்
 • இதில் முக்கிய வேடத்தில் பிரபல தொகுப்பாளினி ரம்யா நடிக்கவுள்ளார்
சித்தார்த்தின் ‘உதயம் NH4’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிமாறன். இதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் ‘பொறியாளன்’ மற்றும் ஜெய்யின் ‘புகழ்’ ஆகிய 2 படங்களை இயக்கினார். தற்போது, மணிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளாராம்.

பாரதிநாதன் என்பவர் எழுதிய ‘தறியுடன்’ என்ற நாவலை மைய்யமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ள இப்படத்திற்கு ‘சங்கத்தலைவன்’ என டைட்டிலிட்டுள்ளனர். முக்கிய வேடங்களில் பிரபல தொகுப்பாளினி ரம்யா, கருணாஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ மூலம் தயாரிக்கவுள்ளாராம்.
 
இதன் ஷூட்டிங் இன்று (ஜனவரி 22-ஆம் தேதி) முதல் பூஜையுடன் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொகுப்பாளினி ரம்யாவே தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டியதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com