முகப்புகோலிவுட்

அபர்ணாவுடன் செம ரொமான்ஸ் செய்யும் சூர்யா..! மேக்கிங் காட்சிகளுடன் வெளியான ’வெய்யோன் சில்லி’ லிரிக்கல் வீடியோ..!

  | February 13, 2020 21:40 IST
Soorarai Pottru

சூரரைப் போற்று திரைப்படத்திலிருந்து வெளியான ‘வெய்யோன் சில்லி’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

சூரரைப் போற்று திரைப்படத்திலிருந்து வெளியான ‘வெய்யோன் சில்லி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று'. இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், சூர்யா பாடிய ‘மாறா' தீம் பாடலும் முதல் சிங்கிள் ட்ராக்காக வெளியானது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் 2-வது பாடல் ‘வெய்யோன் சில்லி' வெளியாகியுள்ளது. சுவாரஸ்யமான தாயாரிப்பு காட்சிகள் மற்றும் புகைப்படங்களுடன், இப்பாடலின் பாடல்வரி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. முரட்டுத் தனமாக இருக்கும் சூர்யா, அபர்ணா பாலமுரளியுடன் உருகி ரொமான்ஸ் செய்யும் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்