முகப்புகோலிவுட்

ஶ்ரீதேவி வேடத்தில் வித்யா பாலன்... கொஞ்சம் இல்ல ரொம்ப கஷ்டமான வேலைதான். இருந்தாலும் என்னால் முடியும்! வித்யாபாலன் ஓபன் டாக்!

  | March 19, 2019 12:52 IST (New Delhi)
Vidya Balan

துனுக்குகள்

 • ஸ்ரீதேவியாக நடிக்க வித்யாபாலன் தேர்வாகியுள்ளார்.
 • இவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தில் நடித்திருந்தார்.
 • அஜித் உடன் பிங்க் ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார்.

தனியார் டிவி  நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் ஶ்ரீதேவி நடித்த "சாந்தினி" திரைப்பட ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க முடியுமா என்று கேட்டதற்க்கு, ஶ்ரீதேவியன் கதாபாத்திரத்தில் நடிக்க துணிவும், தைரியமும் தேவை. ஆனால், அதை என்னால் செய்ய முடியும்.  ஒருவேளை அதற்கு வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு நான் செய்யும் மிகப்பெரிய மரியாதையாகும் என்று தெரிவித்திருக்கிறார் பாலிவுட் நடிகை வித்யாபாலன். 2017ம் ஆண்டு வெளியான வித்யாபாலன் நடித்த "துமாரி சூலு" படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப்படத்தில், ஶ்ரீதேவி நடித்த ஹவா ஹவா படத்தின் தழுவலாக இருந்ததால், அதுவே வித்யாபாலனிம் மிகப்பெரிய ட்ரிப்யூட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பையோபிக் படங்களில் நடிக்க அனுபவம் வாய்ந்த ஒரு நடிகை வித்யாபாலன். சில்க் ஸ்மிதாவின் பையோபிக்காக ஹிந்தியில் "தி டர்ட்டி பிக்சர்" படத்தில் நடித்தார். அதோடு தெலுங்கில் NTR பையோபிக் படத்தில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.
 

 ஶ்ரீதேவி துபாய் ஹோட்டல் ஒன்றின் குளியலைறையயில் தவறி விழுந்து இறந்தது, இந்திய சினிமாவுக்கு ஒரு மாபெரும் இழப்பு. அவரின் இழப்புக்கு பிறகு, பல தயாரிப்பளர்கள், இயக்குநர்கள் அவரின் வாழ்க்கை வரலாறை படமாக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா செய்தியாளர்கள் சந்திப்புல், ஒருவேளை ஶ்ரீதேவி வாழ்க்கை வரலாறை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நிச்சயம் நான் வித்யாபாலனின் கால்ஷீட்டைத் தான் முதலில் கேட்பேன் என்றார். அதோடு, தான் ஶ்ரீதேவியை வைத்து ஒரு படம் இயக்க இருந்ததாகவும், அதற்கான வாய்ப்பு இனி கிடைக்காததால், அவரின் வாழ்க்கை வரலாறை , அவருக்கு எந்தவித பாதகமும் இல்லாமல் எடுப்பேன் என்று கூறினார். 
இந்திய சினிமா உலகில் 300 படங்களுக்கும் மேல் நடித்து சூப்பர்ஸ்டாராக வலம் வந்த ஒரே ஶ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது. சாதிப்பாரா வித்யாபாலன், பொறுத்திருந்து பார்ப்போம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com