முகப்புகோலிவுட்

நயன்தாரா VS சமந்தா..!! காதலர் தின சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்..!

  | February 14, 2020 15:46 IST
Kaathuvaakula Rendu Kaadhal

ஒரு முக்கோண காதல் கதையை நகைச்சுவையோடு இயக்கவுள்ளார் நம்ம விக்கி.

காதலர் தினத்தை முன்னிட்டு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் தனது நான்காவது திரைப்படமான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்டதன் மூலம், ரசிகர்களுக்கு காதலர் தின சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுக்கு இடையிலான ஒரு முக்கோண காதல் கதையை நகைச்சுவையோடு இயக்கவுள்ளார் நம்ம விக்கி. விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காம்பினேஷனில் வைரல் ஹிட்டான ‘நானும் ரௌடி தான்' திரைப்படத்தில் செம ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் ரவிச்சந்தர் தான் இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

ஐந்து வருடம் கழித்து இந்த டீம் மீண்டும் இணைந்துள்ள நிலையில், இவர்களோடு நம்ம ஓரு பொண்ணு சமந்தாவும் கூட்டு சேர ‘காத்துவாக்குல ரெண்டு காதலுக்கு' எதிர்பார்ப்பு கூடுதலாகவே இருக்கின்றது. இப்படத்தை லலித் குமாரின் ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்' இணைந்து தயாரிக்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com