முகப்புகோலிவுட்

ஒரே செல்ஃபி.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன் - விக்னேஷ் சிவன்..!

  | January 07, 2020 19:42 IST
Nayanthara

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ப்ரெக் அப் புறளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்கி..

நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ப்ரெக் அப் புறளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்கி..

நானும் ரௌடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதிலிருந்து, நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் மிகவும் நெருக்கமாக பழகிவருகின்றனர். இருவரும் காதலிப்பதாக வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும், அதனை உறுதி செய்யும் விதமாக, வெளிநாடு, கோவில், சுற்றுளா, விருது விழா என எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாகவே செல்வது மற்றும் மிக நெருக்கமான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் நயன்தாரா தனியாக வந்து கலந்துகொண்டுள்ளார். கிறிஸ்மஸ் நாளன்று இணையத்தில் இருவரும் ஜோடியாக நெருக்கமான ஃபோட்டோக்களைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர், ஆனால் திடீரென நயன் மட்டும் தனியாக விழாவுக்கு வந்தது ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பிய நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் இடையிலான காதல் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இச்செய்தி, பட்டித்தொட்டியெங்கும் பறவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த செய்தி தொடர்பாக ரசிகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவும், இது போன்ற புறளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது விக்கியுடன் நயன்தாரா நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் தான் அது. விருது விழாவுக்கு புறப்படும் முன் அதே புடவையில் விக்கியுடன் நயந்தாரா செல்ஃபி எடுத்துவிட்டு தான் சென்றுள்ளார்.

????

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on


எந்த வார்த்தையும் இல்லாமல் ஒரு ஸ்மைலியுடன் அந்த புகைப்படத்தை எல்லோருக்கும் உணர்த்தும் விதமாக விக்னேஷ் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
மேலும், நயந்தாராவும் அதே புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே ‘மிஸ் விக்கீஸ்' எனும் ஸ்னாக்ஸ் பாக்கேட்டையும் வைத்து மறைமுகமாக விக்னேஷ் சிவனை மிஸ் பண்ணுவதை கூறும் விதமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com