முகப்புகோலிவுட்

பிறந்தநாள் விழாவை நயன்தாராவுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன்! வைரலாகும் புகைப்படங்கள்!

  | September 18, 2019 17:04 IST
Vignesh Shivan

துனுக்குகள்

 • சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியவர் இவர்
 • வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்
 • இன்று தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர்,என பன்முகத்தன்மையோடு இருப்பவர் விக்னேஷ் சிவன். சிம்பு நடிப்பில் வெளியான "போடா போடி" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர். விஜய் சேதுதி நடித்த நானும் ரவுடிதான் என்கிற வெற்றிப்படத்தை இயக்கினார். பல் வேறு ஹிட் பாடல்களை எழுதி பாடலாசிரியராகவும் தன்னை அறிமுகப்படுத்தியவர்.  இவர் எழுதிய பாடல்களில் " தங்கமே உன்னதான்" மாற்றும் காதலே" இன்னும் பல முக்கியமானவையாகும்.

சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி இயக்குநராக தன்னை மீண்டும் தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக்கொண்டார். . தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை தயாரித்து வருகிறார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  அந்த வகையில் அனிருத், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா போன்ற பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர்கள் அனிருத், தரண்குமார் மற்றும் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com