முகப்புகோலிவுட்

நயன்தாரா திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்!

  | October 01, 2019 12:48 IST
Vignesh Shivan

துனுக்குகள்

 • திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்று புள்ள வைத்தார் விக்னேஷ் சிவன்
 • என்ன வேண்டுமானாலும் எழுதட்டும் விக்னேஷ் சிவன் காட்டம்
 • தற்போது திருமணம் குறித்து ஐடியா இல்லை என விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் இன்றுவரை முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்கிற கவுரவப்பட்டத்தை மக்கள் அவருக்கு வழங்கியிருக்கிறார்கள். மலையாளம், தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருப்பவர் நயன்தாரா,
 
இவருடைய திருமணம் குறித்த செய்திகள் இன்றளவும் சர்ச்சைக்குறியதாகவே இருந்து வருகிறது. இவர் தற்போது இயக்குநரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா தற்போது பிகில், தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் வருகின்ற டிசம்பர் 25ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இது குறித்து விக்னேஷ் சிவன் கூறுகையில், "என்ன வேண்டுமானாலும் எழுதட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. அடுத்தடுத்து நிறைய வேலைகள் உள்ளன" என்று கூறினார். மேலும் இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும், இது குறித்து மேலும் விளக்க முடியாது என்றும் கூறினார்.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com