முகப்புகோலிவுட்

மாமியாருக்கு ‘அன்னையர் தின வாழ்த்து’ கூறிய விக்னேஷ் சிவன்..!

  | May 11, 2020 14:06 IST
Nayanthara

"நயன்தாரா போன்ற அழகான குழந்தையை வளர்த்து நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளீர்கள்"

சர்வதேச அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினர். அதேபோல், பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தங்கள் அம்மாக்களுக்கும், உலகம் மூக்க இருக்கும் தாய்மார்களுக்கும் தெரிவித்து பதிவிட்டனர்.

நடிகை நயன்தாரா, ஒரு குழந்தையை தன் கையில் வைத்துக்கொண்டிருக்கும்  புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு “வருங்கால அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் ... பெண்களின் அனைத்து உரிமைகளிலும், ஒரு தாயாக இருப்பது தான் மிகப்பெரியது” என தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதே புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எனது வருங்கால குழந்தைகளின் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்..” என பதிவிட்டு அசத்தினார்.

அதேபோல், அவர் தனக்கு மாமியாராக வரவிருக்கும் நயன்தாராவின் அம்மாவுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நயன்தாரா தனது தாயுடன் இருக்கும் குழந்தைப்பருவ புகைப்படத்துடன் பல புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதே புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட விக்கி “திருமதி. குரியன் அவர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்... இதுபோன்ற அழகான குழந்தையை வளர்த்து நீங்கள் ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளீர்கள். நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். நன்றி அம்மு” என பதிவிட்டிருந்தார்.

விக்னேஷ் சிவன், தனது அம்மா மற்றும் அக்காவுக்கும் வாழ்த்துக்களை மற்றொரு பதிவில் தெரிவித்திருந்தார். மேலும், தனது தாயுடனான பல புகைப்படங்களை கொண்டு ரஜினியின் ‘மன்னன்' திரைப்படத்தில் இடம் பெற்று உலகப் புகழ்பெற்ற ‘அம்ம என்றழைக்காத உயிரில்லையே' பாடலை இணைத்து ஒரு வீடியொவை வெளியிட்டிருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com