முகப்புகோலிவுட்

நயன்தாராவின் நெற்றியில் நெருங்கி முத்தமிடும் விக்கி! இணையத்தை கலக்கும் புகைப்படம்..!

  | June 23, 2020 16:18 IST
Nayanathara

கோலிவுட்டின் மிகப் பிரபலமான காதல் ஜோடியாக தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் உள்ளனர்.

கோலிவுட்டின் மிகப் பிரபலமான காதல் ஜோடியாக தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தம்பதியினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவியதையடுத்து, தவறான காரணத்திற்காக செய்திகளில் வலம் வந்துள்ளனர். பின்னர், விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை வெளியிடுவதன் மூலம் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்தனர். 

அந்த வீடியோவில், அவரும் நயனும் ஒரு ஆப் பயன்பாட்டின் உதவியுடன் குழந்தைகளாக மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இப்போது, விக்கி கலிபோர்னியாவின் புகழ்பெற்ற சான் பிரான்சிஸ்கோ பாலத்தின் மீது நின்றுகொண்டு நயனை நெற்றியில் முத்தமிடும் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் தனது காதலியை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை மீண்டும் காட்ட அவர் எண்ணற்ற எண்ணிக்கையிலான இதய ஈமோஜிகளுடன் படத்தை தலைப்பிட்டுள்ளார். இந்த காதல் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com