முகப்புகோலிவுட்

‘மாஸ்டர்’ நடிகர்களுடன் நெருக்கமாக விக்னேஷ் சிவன்..! வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!

  | March 17, 2020 13:26 IST
Vignesh Shivan

நடிகர் விஜய் சேதுபதியிடம் முத்தம் வாங்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் விக்கி - Vignesh shivan's Instagram post for Master Vijay and Vijay sethupathi goes viral.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்'. 2020-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் விக்நேஷ் சிவனும் கலந்துகொண்டார்.

இப்படத்தில் விக்னேஷ் சிவன் ‘அந்த கண்ண பாத்தாக்கா' மற்றும் ‘குவிட் பண்ணிடு' ஆகிய இரண்டு பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார். இந்த ஆடியோ நிகழ்ச்சியின்போது விஜயுடனும், விஜய் சேதுபதியுடனும் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட விக்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

விஜயுடன் நெருக்கமாக நிற்கும் புகைப்படத்துடன் “அவந்தான், அழகா, அளவா, அவன் சிரிச்சானே, அட அழகந்தானே. விஜய் சாருக்காக நான் எழுதிய முதல் பாடல்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதியிடம் முத்தம் வாங்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு “என்னுடைய ஹீரோ மக்கள் செல்வன், இனிமையான, விவேகமான, நகைச்சுவையான, அழகான, திறமையான, நேர்மையான மற்றும் தாழ்மையான மனிதர்... ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது ஹீரோவே..!” என கூறியுள்ளார்.

இந்த இரண்டு இன்ஸ்டாகிராம் போஸ்டுகளும் இணையத்தில் செம வைரலாகிவருகிறது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com