முகப்புகோலிவுட்

சிகரெட்டை வைத்து lemon-ஐ வெட்டும் ‘தல - தளபதி’ வில்லன்.! வைரலாகும் வீடியோ.,

  | May 20, 2020 14:34 IST
Vidyut Jamwal

மலையேற்றம், பயணம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த உதவிக்குறிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

‘தல' அஜித்தின் ‘பில்லா-2' மற்றும் ‘தளபதி' விஜய்யின் ‘துப்பாக்கி' ஆகிய படங்களில் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். மேலும் ‘அஞ்சான்' திரைப்படத்தில் சூர்யாவுடன் நண்பனாக நடித்து அசத்தியிருந்தார்.

பூட்டுதலின் போது வித்யுத் ஜம்வால் ஒரு சிறந்த நேரத்தைக்  கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவரது சில அசத்தலான ஒர்க்அவுட் வீடியோக்களை பதிவிட்டு, ரசிகர்களை மேலும் கவர்ந்துவருகிறார்.

தற்போது, அவர் தனது சமூக வலைதள பிந்தொடர்பாளர்களுக்கு அசாதாரணமான ஒரு குறிப்பைக் கொடுத்து தகைக்க வைத்துள்ளார்.

#CountryBoy மற்றும் #ITrainLikeVidyutJammwal ஆகிய ஹாஷ்டேக்குகளுடன், தன் சமையலறையில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு எரியும் சிகரெட்டைக் கொண்டு அசாதாரணமாக ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டிக் காட்டியுள்ளார். மேலும், எந்த ஒரு சிறு பொருளையும் ஆயுதமாக பயன்படுத்தமுடியும் என்ற அவர், மலையேற்றம், பயணம் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த உதவிக்குறிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகிவருகிறது.

#CountryBoy #ITrainlikeVidyutJammwal

A post shared by Vidyut Jammwal (@mevidyutjammwal) on

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com