முகப்புகோலிவுட்

தல-தளபதி இருவரும் ஒரே மேடையில்...!! நம்பமுடியலயா..? வெயிட் & சீ...

  | November 06, 2019 15:38 IST
Kamal Hasan

துனுக்குகள்

 • கமல் ஹாசனின் 65-வது பிறந்தநாள் 3 நாள் விழாவாக கொண்டாப்படவுள்ளது.
 • தல-தளபதி இருவருக்கும் கமல் ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
 • முன்னதாக அஜித், கலைஞர் கருணாநிதியின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
தமிழ் திரையுலகின் முக்கிய விழா ஒன்றில் அஜித்-விஜய் இருவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்டப் பார்வை படத்திற்குப் பிறகு அஜித் குமார் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கும் ‘வலிமை' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் விஜயும் லோகேஷ் கனகராஜ் இயக்கும்‘தளபதி 64' படப்பிடிப்பில் உள்ளார். தற்போது பெரும்பாலான தமிழ்பட ரசிகர்களை தன்வசம் கொண்ட இந்த இரு முன்னனி நடிகர்களும் பிஸியான ஷெடுலில் இருக்கின்றனர்.

இந்நிலையில், நாளை (நவம்பர் 17) தனது 65-வது பிறந்தநாளையும், 60 ஆண்டு கால சினிமா வாழ்க்கை நிறைவையும் கொண்டாடும் கமல்ஹாசன், சென்னை மற்றும் பரமகுடியில் 3 நாட்கள் நடக்கவுருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அந்த பிரபலங்களின் லிஸ்ட்டில் தல-தளபதி இல்லாமல் எப்படி..? இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் கமல் ஹாசன்.
ஒட்டுமொத்த திரையுலகமும் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு விஜய் வருவார இல்லையா என்பதை விட, தனது பட ப்ரொமோஷன் நிகழ்ச்சி உடபட எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காத அஜித் கலந்துகொள்வாரா என்பதே பெரும்பாலனோரின் சந்தேகமாக உள்ளது. கடைசியாக அவர் முன்னாள் முதலைச்சர் கலைஞர் கருணாநிதியின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அழைப்பை ஏற்ற அஜித், தான் நிச்சையமாக கலந்துகொள்வதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் தல-தளபதி இருவரும் உலகநாயனை வாழ்த்த ஓரிடத்தில், ஒரே மேடையில், அருகருகே அமரக்கூடிய வரலாற்று நிகழ்வு நடக்கும் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com