முகப்புகோலிவுட்

தளபதி ரசிகர்கள் ரெடியா இருங்க நண்பா.., #MasterThirdLook லோடிங்..!

  | January 25, 2020 22:41 IST
Master

துனுக்குகள்

  • மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் 3-வது லுக் போஸ்டர் நாளை  வெளியாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'மாஸ்டர்' . விஜயின் இந்த 64-வது படத்தில், அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக ஆண்ட்ரியா ஜெரமியா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, மேலும் ஷாந்தனு பாக்கியராஜ், கௌரி ஜி கிஷன், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2020 புத்தாண்டு தினத்தன்றும், செகண்டு லுக் பொங்கல் தினத்தன்றும் வெளியானது. இரண்டு போஸ்டர்களிலுமே விஜயின் மிரட்டலான லுக் இருந்தது. அவை இரண்டுமே ரசிகர்களிடையே நல்ல வரவேறபைப் பெற்றது.
அடுத்ததாக விஜய் சேதுபதியின் லுக் எப்போது வரும், மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கும் இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது மாஸ்டர் படக்குழு. அதாவது #MasterThirdLook நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி இருப்பாரா அல்லது இருவருமே இருப்பார்களா என ரசிகர்களிடையே பெரும் ஆவல் எழுந்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்