முகப்புகோலிவுட்

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் பிரபல இசையமைப்பாளர்

  | February 27, 2018 13:12 IST
Sa Chandrasekar

துனுக்குகள்

  • டிராஃபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர்
  • விஜய் விக்ரம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்
  • டிராஃபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்
டிராஃபிக் ராமசாமி ஒரு சமூக ஆர்வலர். நாட்டில் நடக்கும் தவறுகளை தனிமனிதனாக எதிர்த்து நின்று போராடும் துணிச்சல் மிக்க மனிதர். அவர் வாழ்க்கையைக் கருவாக வைத்து சில மாற்றங்களோடு உருவாகி கொண்டிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. இதில் கதையின் நாயகன் டிராஃபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.

மேலும், ஆர்.கே.சுரேஷ், ரோகினி, உபாஷனா, அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன், சார்லஸ் வினோத், சேத்தன், பேபி ஷெரின், மோகன் ராம், மதன்பாப் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம். தற்போது, இப்படத்தில் பிரபல இசையமைப்பாளரும், ஹீரோவுமான விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் விஜய் விக்ரம் இயக்கி வருகிறார். விஜய் விக்ரம் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். பால முரளி பாலு இசையமைத்து வரும் இதற்கு குகன்.எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்கிறார், பிரபாகர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ஈரோடு மோகன் என்பவர் தயாரிக்கிறார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்