முகப்புகோலிவுட்

விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் சீக்ரெட் என்ன தெரியுமா..?

  | March 22, 2019 20:27 IST
Vijay Antony

துனுக்குகள்

  • ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்
  • இப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்
  • சைமன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக இருந்து பல்வேறு படங்களில் கதாநாயகநாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் அண்டனி.  இவர் தற்போது நடித்து வரும் படம் ‘கொலைகாரன்'.

படம் பற்றி ஆண்ட்ரூ லூயிஸ் அளித்துள்ள பேட்டியில் 'நகரத்தில் அடுத்து அடுத்து கொடூரமான கொலைகள் நடக்கின்றன.கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜுன் விசாரிக்கிறார். விஜய் ஆண்டனி தான் சைக்கோ கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. காரணம் என்ன? என்பதே கதை. கிரைம் திரில்லரான இது ஹாலிவுட் படத்துக்கு சவால் விடும் வகையில் திரைக்கதை இருக்கும்.

படம் பார்ப்பவர்கள் இதை உணர்வார்கள்.விஜய் ஆண்டனி படத்துக்கு முதன் முறையாக வெளி இசையமைப்பாளர் சைமன் இசையமைக்கிறார். பிஎஸ். வினோத்தின் உதவியாளர் முகேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
ஆஷிமா, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலிய அழகியாக தேர்வானவர். அங்கு பல அழகி போட்டிகளில் பட்டம் வென்றவர். இந்த டைட்டிலை விஜய் ஆண்டனிதான் தேர்வு செய்தார்'. இவ்வாறு அவர் கூறினார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்