முகப்புகோலிவுட்

விஜய்யுடன் இணையும் விஜய் ஆண்டனி…!

  | June 17, 2019 17:03 IST
Vijay Antony

துனுக்குகள்

  • கொலைகாரன் திரைப்படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி இருந்தார்
  • இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது
  • தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி
ஆண்ரூ லூயிஸ் இயக்கத்தில் கடந்த வாரம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘கொலைகாரன்'. இந்த படம் சினிமா ரசிகர்களிடையை நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் போப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி பைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து 'இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள்.
 
‘கொலைகாரன்'வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இந்த  இந்த நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நாயகனாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் - இயக்குனர் விஜய் மில்டன் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்குவதோடு, ஒளிப்பதிவும் செய்கிறார்.
தற்போது, இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் 2019 முதல் கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள் தயாரிக்கிறார்கள்.
 
விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்