முகப்புகோலிவுட்

விஜய் ஆண்டனி போலீஸாக நடிக்கும் ‘திமிரு புடிச்சவன்’ டீசர்

  | October 10, 2018 19:43 IST
Vijay Antony

துனுக்குகள்

 • இதில் விஜய் ஆண்டனி காவல் துறை அதிகாரியாக வலம் வரவுள்ளாராம்
 • விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்
 • படத்தை நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடவுள்ளனர்
கிருத்திகா உதயநிதியின் ‘காளி’ படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி கைவசம் கணேஷாவின் ‘திமிரு புடிச்சவன்’, ஆண்ட்ரு லூயிஸின் 'கொலைகாரன்’ மற்றும் இயக்குநர் நவீன் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனி காவல் துறை அதிகாரியாக வலம் வரவுள்ளாராம்.

இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் டூயட் பாடி ஆடி வருகிறார். விஜய் ஆண்டனியே இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன்’ மூலம் தயாரிக்கிறார்.

 

இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது, விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com