முகப்புகோலிவுட்

விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

  | September 17, 2019 16:37 IST
Vijay Devarakonda

துனுக்குகள்

 • தனது அடுத்த தெலுங்கு படத்தை அறிவித்தார் விஜய் தேவரகொண்டா
 • இவரது கடைசி படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகியது
 • இந்த படத்தின் முதல் லுக் இந்த வெள்ளி கிழமை வெளியாகவுள்ளது
‘அர்ஜுன் ரெட்டி' என்னும் ஒரு படத்தில் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு நடிகரான இவர், அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பின் ‘நோட்டா' என்னும் தமிழ் படத்தில் நடித்தார்.

‘கீதா கோவிந்தம்', ‘டியர் காம்ரேட்' என வெற்றி படங்களில் நடித்தார் விஜய். இதில் டியர் காம்ரேட் படமானது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் வெளியானது.
 

அர்ஜுன் ரெட்டி படம் ஹிந்தியில் சாஹித் கபூர் நடிப்பில் ‘கபீர் சிங்' என ரீமேக் செய்யப்பட்டு 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் ஹிட்டானது. இதனை தொடர்ந்து நேரடி ஹிந்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என பல செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தனது அடுத்த படம் தெலுங்கு படம் தான் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டார் விஜய். ‘World Famous Lover' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

நம்ம தமிழ் பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷ், ‘அயோக்யா' பட நாயகி ராக்‌ஷி கண்ணா, ‘மெட்ராஸ்' பட நாயகி கேத்ரின் தெரேசா, இசபெல்லா லெய்தி ஆகியோர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

கிரண்டி மாதவ் இயக்கும் இந்த படத்தை க்ரியேத்திவ் கமர்சியல்ஸ் தயாரிக்கிறது. கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் வரும் வெள்ளி (செப்டம்பர் 20) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com