முகப்புகோலிவுட்

கைதி vs பிகில் : விஜய் ரசிகர்களை கெட்ட வார்த்தையில் திட்டினாரா தயாரிப்பாளர் S.R.பிரபு..?

  | October 23, 2019 14:47 IST
Kaithi

துனுக்குகள்

 • கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
 • வரும் 25ம் தேதி பிகில் படத்துடன் மோதுகிறது கைதி திரைப்படம்
 • கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்
கைதி பட தயாரிப்பாளர் S.R.பிரபு, ரசிகர்களை திட்டி பதிவிட்டுள்ள ட்வீட், விஜய் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.

விஜய் நடித்த ‘பிகில்' மற்றும் கார்த்தி நடித்த ‘கைதி' ஆகிய திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு வரும் 25-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஒரே நேரத்தில் போட்டி போடும் இரண்டு படங்களுமே பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளதால், விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் மீம்ஸ் மூலம் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கைதி திரைப்படத்தின் தயாரிப்பாளர் S.R.பிரபு, ரசிகர்களை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு திட்டியவாறு ஆங்கிலத்தில் ட்வீட் செய்துள்ளார்.  இந்த ட்வீட் விஜய் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.
  சில தினங்களுக்கு முன்பு, #Khaidi நோ சாங், நோ ரொமான்ஸ், ஜஸ்ட் ஆக்‌ஷன் அண்டு த்ரில் என  கைதி பட ட்ரைலர் டுவிட்டரில் வெளியிடப்பட்டது. அந்த பதிவிற்கு பல ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்களில் தெரிவித்து வந்தனர். அதில் சிலர் மீம்ஸ்களுடன் கலாய்த்து வந்தனர். அப்போது சில ரசிகர்கள், தயாரிப்பாளர் S.R.பிரபுவை குறிப்பிட்டு, நீங்கள் விஜயை இழிவு படுத்தி விளம்பரம் செய்கிறீர்கள், உங்கள் விளம்பரம் எதிரமறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதனால் நேர்மறையான விளம்பரங்களை மட்டுமே பரப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.
does49n

Bigil vs Kaithi

இதற்கு பதிளத்த S.R.பிரபு, ரசிகர்கள் சண்டைபோட்டுக்கொள்ள பல விஷயங்களை வைத்திருப்பார்கள், அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது, தனக்கு எல்லா படங்களுமே நன்றாக ஓடவேண்டும் என்றும், முகமில்லா மனிதர்கள் முட்டால்தனமாக பதிவிடும் சில கருத்துக்களுக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கடுமையாக திட்டி பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து பலரும் அவரை இகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே அவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.


  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com