முகப்புகோலிவுட்

'மாஸ்டர்' ஆடியோ லான்ச் எங்கே..? வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் வருத்தம்..!

  | February 28, 2020 08:26 IST
Master

துனுக்குகள்

  • மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
  • இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

மாஸ்டர் திரைப்பட ஆடியோ லான்ச் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி' விஜய் நடிக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியானது. அருண்ராஜா காமராஜாவின் வரிகளில் விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி' எனும் அப்பாடல் வைரல் ஹிட்டானது. 

இப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் ஆடியோ லான்சை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ‘தளபதி' ரசிகர்கள். இந்நிலையிகல், அந்த ஆடியோ லான்ச் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15-ஆம் தேதி, சென்னை லீலா பேல்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் கசிந்ததை அடுத்து, விஜய் ரசிகர்கள் சற்று வருத்ததில் உள்ளனர். ஏனேனில், சமீபத்தில் விஜய் படங்களின் ஆடியோ லான்ச் என்றாலே பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், விஜயின் குட்டிக்கதையை கேட்டு ஆராவாரப்படுத்தி கொண்டாடுவது தான் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், ஹோட்டலில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றால், அந்த அளவிற்கான மகிழ்ச்சி, கொண்டாட்டம் இருக்காது என்பதே ரசிகர்களின் வருத்தமாக ஆஇந்துள்ளது. இதனால், இசை வெளியீட்டின் அதிகாரப்புர்வ தகவலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் தளபதியின் ‘நெஞ்சில் குடியிருக்கும்' ரசிகர்கள்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்