முகப்புகோலிவுட்

அதிரவைக்கும் ‘புன்னகையே’..!! ஜிப்ரான் - வைரமுத்து கூட்டணியில் ‘க/பெ. ரணசிங்கம்’ 2-வது சிங்கிள்!

  | September 18, 2020 15:33 IST
Punnagaiye Second Single

'கவிப்பேரரசு' வைரமுத்துவின் வரிகளில் இப்பாடலை சுந்தரய்யர் பாடியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம்' திரைப்படம் வரும் காந்தி செயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகிறது.

விருமாண்டி என்பர் இயக்க, இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேசுடன் பிரபல ஊடக ஆசிரியர் பாண்டே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தண்ணீர் பிரச்சினையை மிக ஆழமாக பதிவிடும் இந்த திரைப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்திலிருந்து ‘அழகிய சிறுக்கி' எனும் பாடல் முதல் சிங்கிளாக கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இப்போது, இரண்டாவது சிங்கள் பாடலும் வெளியாகியுள்ளது. ‘புன்னகையே' எனும் இப்பாடல் லிரிக்கல் வீடியோவாக தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. 'கவிப்பேரரசு' வைரமுத்துவின் வரிகளில் இப்பாடலை சுந்தரய்யர் பாடியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com