முகப்புகோலிவுட்

“ரொம்ப அழகான படம்” பக்ரீத் படம் குறித்து விஜய்சேதுபதி புகழாரம்!

  | August 17, 2019 17:51 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • இப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கி இருக்கிறார்
  • இப்படத்தில் முதல் முறையாக ஒட்டகம் ஒன்றும் நடித்திருக்கிறத
  • குழந்தைகள் கொண்டாடும் படமாக இருக்கும் என்று விஜய் சேதுபதி புகழாரம்
இயக்குநர் ஜகதீசன் சுப்பு இயக்கதில் விக்ராந்த் மற்றும் வசுந்திரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பக்ரீத். டி இமான் இசை அமைக்கும் இப்படத்தை முருகராஜ மல்லிகா தயாரித்திருக்கிறார்.
 
தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒட்டகம் ஒன்றும் இப்படத்தின் இறுதிவரை பயணிக்கிறது. இப்படத்தைப்பார்த்த பிரபலங்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படத்தை பார்த்து விட்டு விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது,
 
“எனக்கு படம் ரொம்ப பிடிச்சிறுந்தது.குழந்தைகள் அதிகம் விரும்பு இந்த படத்தை பார்ப்பாங்க. ரொம்ப அழகான படம், முழுக்க முழுக்க அன்பை பத்தி மட்டுமே பேசுகிற படம் இது. நல்ல காமெடியாகவும் அதே சமயத்தில் ரொம்ப எமோஷ்னலாகவும் இருக்கும் படம்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
 
இயக்குநர் நவீன் பேசியிருப்பதவது,
 
“இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும். இந்த படத்திற்கு பிறகு விக்ராந்திற்கு நல்ல வாய்ப்புகள் வரும். இந்த படத்தில் நடித்துள்ள வசுந்திரா, ஒட்டகம் மற்றும் இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் ரொம்ப எதார்த்தமா நடித்திருக்கிறார். நிச்சயம் பார்க்க வேண்டிய படம். விக்ராந்தின் காத்திருப்பு, பொருமை எல்லாம் இப்படத்தில் தெரிகிறது' என்று பேசியிருக்கிறார்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்