முகப்புகோலிவுட்

தங்க மகளுக்கு மீண்டும் ஒரு தங்கம் வழங்கிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்றம் !

  | May 16, 2019 20:35 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • விஜய் சேதுபதி சிந்துபாத் படத்தை முடித்திருக்கிறார்
  • இவர் நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்ப பெற்றது
  • விஜய் சேதுபதி மாமனிதன் படத்தை முடித்துள்ளார்
தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு வீரர் வீராங்கனைகள் சர்வதேச அளவில் தக்கங்களை பெற்று வருகிறார்கள். அவர்களுக்க பல முனைகளில் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்த வருகிறது. இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் வெற்றி பெற்ற வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக உதவித் தொகை மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறார்கள்.

சமீபத்தில்,சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார் இலக்யா. 

இந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்