முகப்புகோலிவுட்

‘சங்கத்தமிழன்’ படத்தை முன்னிட்டு விவசாய புரட்சியில் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

  | October 05, 2019 13:58 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • பேனர் கலாரத்தை ஒழித்து விவசாய புரட்சியில் விஜய் சேதுபதி ரசிகர்கள்
 • கள்ளக்குறிச்சி சிவபுரம் கிராமத்தில் ரசிகர்கள் இந்த வேலையில் ஈடுபட்டனர்
 • விதை பந்துகள் மரச்செடிகள் வழங்க திட்டமிட்டனர் விஜய்சேதுபதி ரசிகர்கள்
சங்கத்தமிழன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு பேனர் வைப்பதற்கு மாறாக வட்டிக்கு பணம் கேட்ட விவசாயீக்கு - ஒரு ஏக்கரில் நாற்று நட்டு விவசாயம் செய்து கொடுத்த விஜய் சேதுபதி ரசிகர்கள்
 
qnr2rp48

 
சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் இவருக்கு திருமண மாகி இரண்டு குழந்தைகள் உள்ளது .இந்த நிலையில் அவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி யை சேர்ந்த ஜெய முருகன் என்ற சைக்கிள் கடை உரிமையாளரிடத்தில் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்ய வட்டிக்கு பணம் கேட்டுள்ளார் விவசாயீ பிரகாஷ் .கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞர்கள் விஜய் சேதுபதி யின் சங்க தமிழன் திரைபடம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பேனர்,போஸ்டர் ,பாலபிஷேகம் போன்றவற்றை தவிர்த்து மாறாக அனைவரும் ஒன்று சேர்ந்து விதை பந்துகள் மரச்செடிகள் என வழங்க திட்டமிட்டனர். ஆனால் விவசாயீ ஒருவர் விவசாயம் செய்ய பணம் இல்லாமல் வட்டிக்கு பணம் கேட்டு வருவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் விவசாயீ பிரகாஷ் ஐ தொடர்பு கொண்டனர்.பிறகு விவசாயீ பிரகாஷை நேரில் சந்தித்து விவசாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தனர்.
 
ie1ksd6o


அதன் பேரில் விவசாயீ பிரகாஷின் சொந்த ஊரான சிவபுரத்திற்கு நேரில் சென்று நெல் பயிர் நாற்று நட்டு உழவு செய்து விவசாயீ பிரகாஷ்க்கு உதவி செய்தனர்.மேலும் விவசாயீ பிரகாஷ்-கிற்கு முதற்கட்டமாக பத்தாயிரம் ரூபாய்  பணம் வழங்கினார்.அதே போல டிராக்டர் மூலம் காய்ந்து கிடந்த நிலத்தை உழவு செய்தனர்.பிறகு முறையாக பூஜை செய்து விவசாயீக்கு மறியாதை செலுத்தி ஏர் உழுது நாற்று நட துவங்கினர் .அங்கு வந்த  விஜய் சேதுபதி ரசிகர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர்.அதே போல விவசாயீக்கு நெல் பயிரட தேவையான உரம் ,உட்பட அனைத்திற்கு விஜய் சேதுபதி ரசிகர்களே செய்தனர்.இதனால் விவசாயீ பிரகாஷ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் .தன்னுடைய சொந்த நிலத்தில் நெல் பயிரிட  வட்டி க்கு பணம் கேட்டு அலைந்த நேரத்தில் தனது விவசாய நிலத்திற்க்கு ஒரு ரூபாய் கூட செலவின்றி களத்தில் இறங்கி விவசாயம் செய்து கொடுத்த விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நண்றி தெரிவித்தார்.   மக்கள் செல்வன் ரசிகன் என்ற பெயரில் அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாய புரட்சியில் ஈடுபட்டு வருவது அனைவரிடத்திலுன் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
vdofrg98


  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com