முகப்புகோலிவுட்

'தளபதி 64' படத்தில் விஜய்சேதுபதி எப்படி ?

  | September 28, 2019 10:21 IST
Vijay

துனுக்குகள்

 • மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார்
 • அடுத்த மாதம் இப்படய்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது
 • விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


அட்லி இயக்கத்தில் விஜய்- நயந்தாரா நடித்துள்ள படம் 'பிகில்' இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடை பெற்றது. விரைவில் பிகில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்களாம். 

இந்த படத்தை அடுத்து விஜய் தனு 64 வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது அதன்படி இப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகின.
விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி 64' படத்தில் விஜய் சேதுபதி இணைந்தது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'தளபதி 64' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லிலித்குமார் தான் விஜய்சேதுபதி நடித்து வரும் 'துக்ளக் தர்பார்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால் இப்படத்திற்காக விஜய் சேதுபதி வழங்கிய தேதிகளை மாற்றியமைக்க ஆலோசனை கூறியுள்ளார். அதனை ஏற்று கொண்ட விஜய் சேதுபதி, 'தளபதி 64' படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். என தகவல்கள் தெறிவிக்கின்றன.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com