முகப்புகோலிவுட்

வெளியானது அக்ஷரா ஹாசன் பட டைட்டில் போஸ்டர்..!

  | September 14, 2020 21:25 IST
Vijay Sethupathi

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்

உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் முதலில் பாலிவுட் சினிமாவில் தான் அறிமுகமானார். அவர் ஹிந்தியில் ‘ஷமிதாப்' மற்றும் ‘லாலி கி ஷாதி மேன் லாடூ தீவானா' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து 2017-ஆம் ஆண்டு அஜித்தின் ‘விவேகம்' திரைப்பத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கடந்த ஆட்னு வெளியான விக்ரமின் ‘கடாரம் கொண்டான்' திரைப்படத்தில் தனது திறமையான நடிப்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதையடுத்து, Zee5-ன் ‘ஃபிங்கர் டிப்' எனும் வலை தொடரில் காணப்பட்ட அவர், தற்போது அருண் விஜய் மற்றும் இஜய் ஆண்டணி இணைந்து நடிக்கும் ‘அக்னிச் சிறகுகள்' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இப்போது, தமிழில் இயக்குநர் ராஜா ராமமூர்த்தியின் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெண்களை மையப்படுத்தப்பட்ட இந்த படத்தில் கர்நாடக பாடகியாக அக்ஷராஹாசன் நடிப்பதால், படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு தனது பாத்திரத்திற்கு முழுமையைத் தர கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார் என்பது வரை சமிபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘ட்ரெண்ட் லவுட்' தயாரிக்கிறது. இப்படத்துக்கு ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்போது ‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் வைரலாகிவருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com