முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி இல்லைன்னா விஜய் ஆண்டனி! நயன்தாரா படத்தில் அதிரடி மாற்றம்!

  | September 19, 2019 09:47 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • விஜய் சேதுபதி நடிக்க இருந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார்
 • நயன்தாரா, மம்முட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் இது
 • விபின் இப்படத்தை இயக்குகிறார்
தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளர்கள் நடிகர்களாவதும், நடிகர்கள் இசை அமைப்பதும் இயல்பாகி வருகிறது. எதுவாயினும் பன்முகத்தன்மையோடு  செயல்படும் கலைஞர்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாட தவறியது இல்லை.
 
அப்படி இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விபின் இயக்கும் இப்படத்தில் மம்முட்டி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார்.

இதையடுத்து விஜய் சேதுபதிக்கு பதில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மலையாள சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமாகிறார் விஜய் ஆண்டனி. அங்கு அவருக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
 
 
 

 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com