முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ருதிஹாசன்…!

  | April 22, 2019 15:20 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கிறார்
 • லாபம் படத்தை எஸ்.பி. ஜனநாதன் இயக்குகிறார்.
 • படப்பிடிப்புகள் தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ளது

இயக்குநர் ஜனநாதன் இயக்கிய படமான புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்திற்கு பின் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குநர் ஜனநாதனுடன் கைகோர்க்கிறார். இந்தப் படத்திற்கு லாபம் என்று பெயரிட்டுள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பில் இயக்குநர் ஜனநாதன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பங்கேற்றனர். விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேருகிறார் ஸ்ருதிஹாசன். வில்லனாகப் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார்.

 

tvl84f7


இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.

 சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த  சூப்பர் டீலக்ஸ் படம் வெற்றியடைந்த நிலையில் சிந்துபாத் படம் விரைவில் வெளியாகவுள்ளது. மலையாளம் தெலுங்கிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com