முகப்புகோலிவுட்

“என் அன்பு உடன் பிறப்புகளே” விஜய் சேதுபதி வெளியிட்ட வீடியோ!

  | July 20, 2019 18:21 IST
Dear Comrade

துனுக்குகள்

  • விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தான 2வது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர்
  • ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறர்
  • இப்படத்தின் ஆன்தம் பாடலை விஜய் சேதுபதி பாடியிருக்கிறார்
அறிமுக இயக்குநர் பாரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகி  இருக்கும் படம் டியர் காம்ரேட். கீதா கோவிந்தம் திரைப்படத்துக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனா ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக  இணைந்துள்ளனர்.
 
வரும் ஜூலை 26-ந்தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் புரொமோ‌ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் படக்குழுவினர்.
 
நான்கு மொழிகளில் இந்தப் படத்தின் ‘காம்ரேட் ஆன்தம்' என்கிறபாடல் வெளியாகியுள்ளது. பாடலின் தமிழ் வெர்‌ஷனில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாடியுள்ளார்.
 
மேலும் ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோரும் உடன் பாடியிருக்கின்றனர். வா ஒன்னா சேரலாம் வா என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலில் “என் இனிய தமிழ் மக்களே”, “என்னை வாழ வைக்கும் தெய்வங்களே”, “என் அன்பு உடன் பிறப்புக்களே” போன்ற வரிகள் இடம் பெற்றிருக்கிறது.
 
 ஜஸ்டின் பிராபாகரன் இசையில் துடிப்பான வரிகளுடன் ஈர்க்கிறது இப்பாடல். ஸ்டோனி சைகோ, டோப் டேடி ஆகியோரே இந்தப் பாடலை எழுதியுள்ளனர். தமிழில் விஜய் சேதுபதி பாட, மலையாளத்தில் துல்கர் சல்மானும், தெலுங்கில் படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டாவும் பாடியுள்ளனர்.  விஜய் சேதுபதி வெளியிட்ட இப்பாடல் தற்போது இணைய தளத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்