மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் கதிர். அப்படத்தைத் தொடர்ந்து கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், சிகை, சத்ரு ஆகிய ஆகிய படங்களில் நடித்துள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்படம் அவருக்கு மிகப் பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளியான விஜயின் ‘பிகில்' திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் நடித்துள்ள ‘ஜடா' திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இதனை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தை போயட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. குமரன் இயக்கியுள்ள இப்படத்தில், யோகி பாபு, கிஷோர், ரோஷினி, ஸ்வாதிஷ்டா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
ஒவ்வொரு கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதிர், ‘ஜடா' படத்தில் ஒரு கால்பந்து வீரராக நடிக்கிறார். பிகில் படத்திலும், கால்பந்து சோச்சாக நடித்த அவர், விளையாடாமல் கடைசிவரை வீல் சேரிலேயே முடங்கிவிட்டார். ஆனால் ஜடாவில் களத்தில் இறங்கி அடிக்கும் கதாநாயகனாக பார்க்கலாம் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது. மேலும், இப்படம் ஒரு ஃபுட்பால் ஹாரர் படமாகும். ட்ரைலரிலேயே சில ட்விஸ்டுகள் இருப்பதால், இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கதிர் இதையடுத்து ‘சர்பத்' எனம் படத்தில் நடித்து வருகிறார்.
Congrats team ????
— VijaySethupathi (@VijaySethuOffl) November 15, 2019
Here it is #JadaTrailer⚽
⏩https://t.co/uN9dUQg9NM#JadafromDec6th@am_kathir@DirKumaran@iYogiBabu@im_gowthamoffl@ArSoorya@SamCSmusic@ARichardkevin@ask_poetstudios@roshniprakash_@ynotxworld@thinkmusicindia@pro_guna