முகப்புகோலிவுட்

“நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்”- விஜய்சேதுபதியை மிரட்டும் தமிழிசை!

  | August 12, 2019 16:40 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • ஜனநாயகத்துக்கு விரோதமானது காஷ்மீர் பிரச்னை குறித்து விஜய் சேதுபதி கருத்து
  • விஜய்சேதுபதியின் கருத்துக்கும் கண்டனம் தெரிவித்த தமிழிசை
  • விஜய் சேதுபதி தற்போது மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டது, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்தது என பா.ஜ.க. அரசு அவசர அவசரமாக நடத்திய திட்டங்கள் இந்தியாவில் விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்த பிரச்னை தமிழக்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
தொடர்ந்து இவ்விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும் போது,
 
‘காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அதில்,
அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது, என்று பெரியார் கூறியதை குறிப்பிட்டு விஜய் சேதுபதி பேசினார்.
 
இதற்கு பதிலலிக்கும் விதமாக பேசிய பி.ஜே.பியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,
 
“காஷ்மீர் பற்றி சிலர் தவறாக கருத்து கூறுகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீரை பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள்.பெரியார் பற்றி எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்காட்டு கூறுகிறார்கள். அவர்கள் சினிமாவில் மட்டும் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீரில் இந்தியா செய்த நடவடிக்கையை பல கோடி பேர் வரவேற்று இருக்கிறார்கள். உலக தலைவர்கள் பலர் இந்த நடவடிக்கையை வரவேற்று இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நடிகர்கள் கொஞ்சம் அமைதி காப்பதே நல்லது என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது விவாதப்பொருளாக மாறிவருகிறது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்