முகப்புகோலிவுட்

“அந்த கருத்துக்கள் என்னுடையது அல்ல” விஜய்சேதுபதி விளக்கம்

  | February 12, 2019 15:25 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • சீனுராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார் இவர்
  • சீதகாதி படத்தில் ஐயா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
  • பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்
திரைப்பிரபலங்களின் பெயரில் போலியான கணக்கு தொடங்கி சமூகவலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
சில சமயங்களில் பிரபலங்களின் சமூகவலைதள கணக்குகள் முடக்கப்படுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் மக்கள் செல்வன் என்று மக்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதியின் பெயரில் பல போலி கணக்குகள் ட்விட்டர் பக்கத்தில் நிரம்பி காணப்படுகிறது. அதில் சிலர் பல்வேறு மோசமான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். மக்கள் அந்த செய்தியை விஜய் சேதுபதிதான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறார்கள். சமீபத்தில் பகவத் கீதை பற்றி அவர் தவறாக கூறியதாக போஸ்டர் ஒன்று சமூகவலைதளத்தில் சுற்றிக்கொண்டிருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, “என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன்.  சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்” என்றும் ‘நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க - "சாதியை இப்படி ஒழிக்கலாம்; விஜய் சேதுபதியின் யோசனை"

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்