முகப்புகோலிவுட்

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் இசை கலைஞனாக நடிக்கும் விஜய் சேதுபதி..!

  | June 15, 2019 18:07 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • வெங்கட கிருஷ்ண இப்படத்தை இயக்குகிறார்
  • இப்படத்தில் இசை கலைஞராக நடிக்கிறார் விஜய் சேதுபதி
  • விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று பழனியில் துவங்கி இருக்கிறது. இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
 
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேச அளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக VSP 33 என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
 
VSP 33-யில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புதுவித பாணியில் அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்