முகப்புகோலிவுட்

‘தளபதி’யை அடுத்து மற்றொரு மாஸ் ஹீரோவுடன் நடிக்கும் விஜய் சேதுபதி.?

  | August 24, 2020 10:59 IST
Vijay Sethupathi

மீபத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி' விஜய்யுடன் தனது அடுத்த திரைப்படமான ‘மாஸ்டர்' வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. 

‘மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முன்னதாக சசிகுமார், விஷ்ணு விஷால், கௌதம் கார்த்திக், அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, மாதவன், அதர்வா என பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார், இருப்பினும் இப்போது ‘தளபதி' விஜயுடன் இணைந்து மாஸ்டரில் பணியாற்றி டாப் ஹீரோக்களுக்கு இணையாகவும் நடிக்கத் தயார் என்று நிரூபித்தார். அடுத்ததாக கமல் ஹாசனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் உள்ளன.

இதற்கிடையில், தெலுங்கிலும் கடந்த ஆண்டு சிரஞ்சீவியுடன் இணைந்து ‘சை ரா நரசிம்ம ரெட்டி' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் ‘அய்யப்பனும் கோஷியும்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்போது பவன் கல்யாணுடன் இந்த ரீமேக்கில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் முக்கிய வேடங்களில் நடித்து கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்' பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ஒரு செல்வாக்குமிக்க முன்னாள் ஹவில்தார் மற்றும் துணை ஆய்வாளருக்கு இடையிலான மோதலைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை சச்சி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார்.

சமீபத்திய தகவலின் படி, இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ‘பவர் ஸ்டார்' பவன் கல்யாண் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்திலும், விஜய் சேதுபதி ஹவில்தார் கதாப்பாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் தயாரிப்பு பதாகையின் கீழ் இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ் இப்படத்தை வழங்குவார் என்றும் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படத்தை வெங்கி அல்லுரி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் மற்றும் அரசியல்வாதியான பவன் கல்யாண் தற்போது, பாலிவுட் ‘பிங்க்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்' படத்தில் நடித்துவருகிறார். 

அதேபோல், விஜய் சேதுபதி துக்ளக் தர்பார், கடைசி விவாசாய், யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற பல படங்களிலும் மற்றும் பிற மொழிகளில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com