முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.! புகைப்படங்கள் உள்ளே..

  | September 22, 2020 22:12 IST
Vijay Sethupathi

விஜய் சேதுபதி தனது கைவசம் மாஸ்டர், ‘800’, க/பெ. ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களை வைத்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களை கொடுத்து அமர்களப்படுத்தி வரும் முன்னணி நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், இடம் பெருள் ஏவல், ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துவருகிறார். டி.இமான் படத்திற்கு இசை அமைத்து வருகிறார்.

bo42b0mo

சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, நாடு மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது, மேலும் பல திரைப்படங்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது, லாபம் பட தயாரிப்பாளர்கள் சோஷியல் மீடியாவில், படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளது.

ho5tn7c8

இப்படத்தில் விஜய் சேதுபதி சமூக ஆர்வலராக நடிக்கவுள்ளார் என்றும் அவர் விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்ஜி கேமராவை கையாள, அந்தோணி படத்தொகுப்பு செய்கிறார். இதற்கிடையில், விஜய் சேதுபதி தனது கைவசம் மாஸ்டர், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800', க/பெ. ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களை வைத்திருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com