முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்..!

  | May 14, 2019 15:28 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • இப்படத்தை எஸ்.பி. ஜனநாதன் இயக்கி வருகிறார்
  • டி, இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்
  • ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்
எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் 'லாபம்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில்,
 
ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் துவங்கிய நிலையில் மதுரை, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
 
அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.


 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்