முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகை! 200 வணிகர்களை கைது செய்தது காவல்துறை!

  | November 05, 2019 16:55 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

 • இன்று விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது
 • 200 வணிகர்களை காவல்துறை கைது செய்தது
 • இந்த போராட்டத்தை தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு நடத்தியது
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஒரு இணைய விற்பனை நிறுவன விளம்பரத்தில் நடித்திருந்தார். இது இணையத்தில் பலசரக்கு பொருளை விற்கும் நிறுவனம். இந்த விளம்பர படத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதற்கு வியாபாரிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
இணைய விற்பனை நிறுவனங்களால் சிறுகுறு வணிகர்கள் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்ப்பாக தொடர்ந்து போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இணைய விற்பனை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு எதிராக வணிகர்கள் ஆர்பாட்டாத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார்கள்.
 
சமூல நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் விஜய்சேதுபதி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் மனதில் வைக்க வேண்டும். தான் நடிப்பதற்கு முன் இது யாரையும் பாதிக்காத வகையில் நடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
அதன்படி இந்த விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வணிகர் சங்க பேரமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 வணிகர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் வைத்துள்ளார்கள்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com