முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் “சிந்துபாத்” வெளியாகும் நாள்?

  | April 14, 2019 20:25 IST
Vijay Sethupathi

துனுக்குகள்

  • இந்த படத்தை அருண்குமார் இயக்கி இருக்கிறார்
  • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்
  • இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார்
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. இப்படத்தை குமாரராஜா தியாகராஜன் இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். அவருடைய அந்த கதாபாத்திரத்தை சித்தரிக்கப்பட்ட விதத்திற்கு திருநங்கைகள் பலரும் எதிர்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.  இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘சிந்துபாத்' என்னும் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
 
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை மே 16ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்