முகப்புகோலிவுட்

படமானது Pub-G கேம்... விஜய் சேதுபதி வெளியிட்ட மோஷன் போஸ்டர்...

  | November 08, 2019 12:48 IST
Pubg

துனுக்குகள்

  • ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.
  • இப்படத்தை தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ கி இயக்கியுள்ளார்.
  • இப்படத்தின் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
பப்-ஜி கேமை கருவாக வைத்து எடுக்கப்பட்ட படத்தின் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் சுருக்கமாக Pub-G என அழைக்கப்படுகிறது. பப்ஜி கேமைப்பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது எனும் இன்றைய சூழலில், இந்த மாறுபட்ட தலைப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகம் முழுதும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ஃபோன் பயன்படுத்துபவர்களிடையெ புகழ்பெற்ற கேம் என்றால் அது பப்ஜி தான். நாளுக்கு நாள் இந்த கேமின் மோகம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கேமிற்கு அடிமையாகி பல பாதிக்கப்புகளுக்கு உள்ளாவதாக செய்திகளும் வந்து வந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், காமெடி கலந்த த்ரில்லர் கதையான இப்படத்துக்கு இந்த டைட்டிலை வைத்திருப்பது வரவேற்கதக்கதாக பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் முன்னணி கதாப்பத்திரத்தில் பிக்பாஸ்-2 புகழ் ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், மொட்டை ராஜேந்திரன், பிக் பாஸ் ஜூலி, அர்ஜுமன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கதாநாயகனாக நடித்த ‘தா தா 87' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா, ஜூலி உட்பட 5 நாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளார்களாம். இவர்கள் அனைவரும் ஒரு பயங்கரமான ரியாலிட்டி கேமில் கலந்துகொண்டு, எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதைப்போன்ற கதையுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்