முகப்புகோலிவுட்

விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' படத்தின் முக்கிய அறிவிப்பு…?

  | May 08, 2019 10:12 IST
Sanga Tamizhan

துனுக்குகள்

  • இப்படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார்
  • விஜயா புரொட்ஷன்ஸ் தயாரிக்கிறது
  • நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா இப்படத்தில் நடிக்கிறார்கள்
தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மணிகண்டன் இயக்கத்தில்            ‘கடைசி விவசாயி' அருணி குமார் இயக்கத்தில் ‘சிந்துபாத்', சீனுராமசாமி இயக்கத்தில் ‘மாமனிதன்' உள்ளிட்ட படங்களை நடித்து வருகிறார்.
 
இதில் சுனுராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாமனிதன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜயா புரொட்ஷன்ஸ் சார்பாக பாரதி ரெட்டி தயாரிக்கும் 'சங்கத்தமிழன்' படத்தில்  நடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் இன்று மாலை வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
 
இப்படத்தில் விஜய் சேதுபதியோடு ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ், நகைச்சுவை நடிகர் சூரி, நடிகர் ஸ்ரீமன் இன்னும் பலர் நடிக்கிறார்கள். தந்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்