முகப்புகோலிவுட்

தளபதி 64 திரைப்படத்தில் இணைந்த பிரபல டிவி தொகுப்பாளினி..!

  | November 09, 2019 12:23 IST
Thalapathy 64

துனுக்குகள்

  • விஜய் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரம்யா.
  • மங்காத்தா, ஓகே கண்மணி படங்களில் நடித்துள்ளார்.
  • இவர் தளபதி 64 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் நடிக்கும் தளபதி 64 திரைப்படத்தில் பிரபல தொலைக்காட்சி, நிகழ்ச்சித் தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் நடிக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பளினியாக அறிமுகமான ரம்யா சுப்ரமணியன், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திரைப்பட ஆடியோ லான்ச், விருதி விழா என பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ரம்யா, ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் என்று சொல்லும் அளவிற்கு எப்போதும் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடர்பயிர்ச்சிகளை செய்கிறவர்.
இவர் அஜித்தின் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரம்யா “இது தான் எனது வாழ்க்கையின் மிக சிறந்த உன்மையான தருணம், இப்படி ஒன்று நடப்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும், தளபதி விஜயிக்கும் மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்